search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி குடிநீர்"

    ராமேசுவரம் அருகே லாரிகளில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காதில் பூ சுற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ளது பேய்க்கரும்பு, செம்மடம், அய்யாண் குண்டு கிராமங்கள். இங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து டேங்கர் லாரிகளில் வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    எனவே டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் நுகர்வோர் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறிப்பிட்ட அளவுதான் தண்ணீர் எடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் தமிழக மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமையில் கிராம மக்கள் காதில் பூ சுற்றி ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி தாசில்தார் சந்திரனிடம் மனு கொடுத்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 11-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews

    ×